பொதுத் தேர்தல் – நான்கு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக நான்கு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னபிரியவின் கையொப்பத்துடன், நேற்றிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுயாதீனக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் மற்றும் அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுக்களின் ஊடாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான எண்ணிக்கை என்பன குறித்து ஒரு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்கள், மற்றுமொரு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், நான்கு மாவட்டங்களுக்கு, உறுப்பினர்களை தெரிவு செய்யும் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.