இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளது – மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு கண்காணித்தல், துன்புறுத்தல், மனித உரிமை பணியாளர்கள் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்துகின்றது என அந்த கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த 15 மனித உரிமை பணியாளிகளிடம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

இதன்போது தொடர்ச்சியான கண்காணிப்புகள் அதிகாரிகள் மட்ட அழுத்தங்கள் காணப்படுவது தெரியவந்துள்ளது.

ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இலங்கையில் அச்ச சூழல் மீண்டும் ஏற்படுத்தப்படுகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்களில் அரச பாதுகாப்பு இயந்திரத்திற்கு தொடர்பிருப்பது புலனாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்ணிற்கு தெரியாமல் இடம்பெறும் விடயங்களே ஆபத்தானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.