இலங்கையில் உள்ள அரசியல் முறைதான் இங்குள்ள பாரிய பிரச்சனை

(2018 பெப்ரவரி மாத தேசம் இதழ்)

கலைஞர் ஒருவர் உருவாவது தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வொன்றல்ல. குறிப்பாக வடபகுதியில் உங்களைப்போன்ற ஒரு கலைஞர் உருவாகியிருப்பது உண்மையில் விசேடமானது. உங்களைப்பற்றியும் நீங்கள் கடந்துவந்த அப்பாதையைப் பற்றியும் எங்களோடும் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

நான் கலைத்துறையில் காலடிவைப்பதற்கு பிரதான காரணக்கர்த்தாவாக இருந்தவர்கள் எனது தாயும் தந்தையும் ஆவர். எனது தாயார் ஆங்கில ஆசிரியை.
அவர் ஆங்கில கவிதைகளில் பெரும் ஈடுபாடு கொண்டவர். எனது தந்தை வியாபாரியாகவிருந்தாலும் கவிதைகளை நேசிப்பவர். அவர் தமிழ் கவிதைகளை
சேகரித்தார். அதேபோன்று எனது தந்தையின் மூலம் சிங்கள கலைப்படைப்புகளிலும் ஈர்ப்பு ஏற்பட்டது. எனது தந்தைக்கு நன்றாக சிங்கள மொழியை கையாள முடியும். எனது தாயாரிற்கும் தந்தைக்கும் இடையில் இருந்த ஒரே ஒற்றுமை என்னவென்றால் இருவரும் கவிபிரியர்கள். அவர்கள் இருவரின் செல்வாக்கின் காரணமாக நானும் கவிதைப் பக்கம் ஈர்க்கப்படலானேன்.

நான் இளமை வீரியம் நிறைந்த படைப்புகளாக கவியெழுத ஆரம்பித்தேன். அதற்கு முதலாவதாக தமிழ் கவிதைகளில் செல்வாக்கு கிடைத்தது. ஆனால் பிற்காலங்களில் சாதிப் பிரச்சினை மற்றும் இன்னும்பல சமூக பிரச்சினைத் தொடர்பாக கவிதைகளைப் படைக்க ஆரம்பித்தேன். எனது தாயார் சாதிப் பிரச்சினையை அந்தளவிற்குப் பெரிதாகக் கண்டுக்கொள்பவரல்ல. இருந்தாலும் எனது தந்தை அது தொடர்பாக கூடுதல் கவனமாகவிருப்பார். வியாபாரி என்ற வகையில் வன்னியில் விவசாய வேலைத்திட்டங்களுக்குள் முதலீடு செய்தார். சாதிமுறையின் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தார்.

தாயார் சாதிமுறை தொடர்பில் கண்டுக்கொள்ளாததினால் தாயாருக்கும் தந்தைக்கும் இடையில் பிரச்சினையும் இருந்தது. அந்த பிரச்சினையின்
காரணத்தால் ஒரு சந்தார்ப்பத்தில் எனது கல்வி வேலைத்திட்டங்கள் ஸ்தம்பிதமடைந்தது. சாதிப் பிரச்சினை என்னை மிகுந்த கவலைக்குள் ஆழ்த்தியது.
ஒடுக்கப்பட்டவார்களுக்காய் நான் காலடிவைத்தது என்னை இயக்கிய சாதிப்பிரச்சினையைப் பார்த்த பின்பே ஆகும்.

நீங்கள் ஆரம்பக்காலத்தில் தெற்கில் வாழ்ந்த ஒருவர். ஆரம்பக் கல்வியையும் தெற்கில் கற்றுள்ளீர்கள். இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களது தந்தை உங்களைக்கூட்டிக் கொண்டு வடக்கிற்கு சென்றுவிட்டார். அதனால் உங்களுக்கு சிங்களம் கைதவறியது. எப்படியாய் இருந்தாலும் வடக்கிற்கு சென்ற உங்களது அனுபவம் எப்படிப்பட்டதாய் இருந்தது?

சமஷ்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவே எனது தந்தை அவரின் சகோதரரோடு மன்னாரிலும் வன்னியிலும்
விவசாய வேலைத்திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதுவரையில் நாங்கள் மத்துகமை பகுதியில் இருந்தோம். எனது அதிகமான நண்பர்கள்
சிங்களவர்கள். தந்தையின் வியாபார வேலைகளுக்காக வேண்டி எனக்கு வடக்குக்கு போகவேண்டியதாயிற்று.

அன்றிலிருந்து நான் நெடுந்தீவிலேயே வாழ்ந்துவந்தேன். அப்போது எனக்கு சிங்கள ஆசிரியை தனிப்பட்டு சிங்களம் கற்பித்தாhர். அந்தக் காலமென்பது
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாண்டு கொண்டிருந்த காலம். சிங்கள மொழியை அரச மொழியாக்க வேண்டும்  என்று அதனை அடிப்படையாகக் கொண்ட
பிரச்சார வேலைகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அந்த தீர்மானத்தினால் எனது தந்தை மனக்கிளர்ச்சிக்குள்ளாகி ”எம்மை இந்நாட்டின்
சமனான பிரஜையாக கருதப்படவில்லையானால் சிங்களத்தை கற்றுக்கொள்ள வேண்டியதேவையில்லை.” என்றுக்கூறினார். அதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக பயின்று வந்த எனது சிங்கள கல்வி அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.

நான் மட்டுமல்ல! வடக்கில் நிறையப்பர் இதுபோன்று சிங்களம் பயிலுவதைக் கைவிட்டனர். ஆனால் இன்று நாட்டிலிருக்கும் பிரதான பிரச்சினைதான்
மொழிப்புரிந்துணர்வு இல்லாமை. சிங்களவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தமிழர்களுக்கு சிங்களம் தெரியவில்லை. இரு சாராரும் இது சம்பந்தமாக சிந்திப்பார்களேயானால் தற்போது நிலவும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு முடிந்தாயிருக்கும். குறிப்பாக மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் இருபுறமும் இணைக்கும் பாலம். ஆனால் யார் கைகளிலும் அந்தப்பால உறவு நிர்மாணிக்கப்படுவதில்லை. இதுவரையில் அந்த ஒத்துழைப்பை நல்கக்கூடிய சிறு முயற்சிகள் இருப்பதும் மறுக்கமுடியாது. ஆனால் அது தேவையான மட்டத்திற்கு இன்னும் வந்திருக்கவில்லை.

வடக்கில் நிலவிய யுத்த நிலைமை, இன்னமும் தேசியவாதிகளிடையே சிறிவு ஒடுக்கப்பட்ட, சிறைப்பட்டக் காரணங்களாவிருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அதற்கான பிரதான காரணம் தான் வரலாற்றில் பதியப்பட்டுள்ள தவறான வரைப்படம். சரியான பக்கத்திலிருந்து வரலாற்றில் தகவல் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. வரலாற்றின் ஆரம்பக்காலத்திலேயே இந்நாட்டின் பிரதான இரு இனத்தினர் வாழ்ந்தனர். தெற்கில் பெரும்பான்மையாக
சிங்கள மக்களும், வடக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் வாழ்ந்து வந்தனர். சிங்கள மக்களின் வரலாறு தொடர்பில் மகாவம்சம் முன்நிற்கிறது. ஆனால் தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான அவ்வாறான தரவுகள் இல்லை. ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்தின் இந்நாட்டில் தமிழ் மக்களும் வாழ்ந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.

சில முரண்பாடுகள் இருந்தாலும் கூட இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர். குறிப்பாக எனது தந்தையின் பரம்பரைவரையில் இதுபோன்ற முரண்பாடுகள் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையில் இருந்ததில்லை. ஆனால் அதன் பிறகு கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்மானங்களினால் இவ்வினங்களுக்கிடையில் பாரியதொரு விரிசல் உருவாக்கப்பட்டு விரோதமும் வளர்க்கப்பட்டது.

இலங்கையில் சிங்கள கலாசாரத்தைக் கொண்ட அம்சங்களைப் பார்க்கின்றபோதிலும் தமிழ் கலாசார அம்சங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் இந்திய கலாசாரத்தோடுள்ள சம்பந்தம் மிக நெருக்கமானது. தமிழினத்தவர்களுக்கு இலங்கையர் என்ற மனநிலை உருவாவதற்கு இது தடையாகவிருக்கும்  காரணமாக அமையுமல்லவா?

இல்லை! நான் அதைத் தவறான ஒரு கருத்தாகவே பார்க்கின்றேன். சிங்கள இனத்தவர்கள் வாழ்வது இலங்கையில் மட்டுமே. அதனால் அவர்களுடைய தனிப்பட்ட அடையாளங்கள் இருப்பது இயற்கையானதே. ஆனால் தமிழினத்தவர்கள் இலங்கையில் மட்டும் அடையாளம் காணக்கூடிய இனத்தவர் அல்லர். உலகின் பல நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அந்நாட்டின் கலாசாரத்தின் தாக்கம் தமிழரிடத்தே நிலவுவதையும் தடுக்கவியலாது.

விசேடமாக தென்னிந்தியாவின் தாக்கம் கண்டிப்பாகவிருக்கும். பௌத்த கலாசாரத்தோடு ஒப்பிடுகையில் இதனை இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். சிங்கள இனத்தவர்கள் இலங்கையில் மட்டுமே உள்ளவர்கள் என்றாலும் பௌத்த மக்கள் உலகின் இன்னும் பல நாடுகளில் ஜீவிக்கிறார்கள்.
அதனால் இலங்கையின் பௌத்த கலாசாரத்திற்கு அதன் தாக்கம் உண்டு. அதனால் இலங்கையில் தமிழ்கலாசாரம் என்று பார்க்கும்போது மேற்கூறிய கருத்தை நான் பெரியதொரு பிரச்சினையாக கருதவில்லை.

அதேபோன்று கடந்த காலங்களில் நிலவிய அரசியல் நிலைமைகளினால் தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களிலிருந்து தமிழர் வெளியில் தள்ளக்கூடிய
நிலைமைகளும் தோன்றின. நான் இந்த அரசியற் பிரச்சினையைத்தான் பாரியதொரு பிரச்சினையாக கருதுகிறேன்.

1971 இல் சோஷலிசத்திற்காக போராடிய சமூகத்தில் 1983 ஆகும்போது இனவாத கலவரங்கள் உருவாகின. 1971 இன் நிலவரங்கள் தொடர்பில் எண்ணிடலங்கா பேரானந்தத்தில் கவியெழுதிய நீங்கள் 1983 ஐ எவ்வாறு பார்க்கிறீர்கள்?

1971 ஆம் ஆண்டு போராட்டம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே உருவானதொன்று. அது தனி இனத்தவரின் உரிமைகளுக்காக வேண்டி செய்த போராட்டமல்ல. ஆனால் 1983 என்பது ஒரு கசப்பான அனுபவம். சிறு குழுவினரின் அரசியல் அதிகார தேவைகளுக்காக வேண்டி இரு இனத்தவர்களுக்கிடையில் மோதலை உருவாக்க முற்பட்ட செயற்பாடே அன்று காணப்பட்டது. ஆனால் அன்று இரு இனத்தவருக்குமிடையில் பிரச்சினைகள்
தோன்றியிருக்கவில்லை. சில இனவாதிகளே இந்த இனக்கலவரத்திற்கு தயாராகினர். ஆனால் அந்த இனக்கலவரத்தின் சிங்கள மக்களைக்காட்டிலும் தமிழ்
மக்களுக்கு ஏற்பட்ட இழப்பே பெரும் விசாலமானது.

யுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. யுத்தத்தின் பின்னரான தற்போதைய நிலை எப்படிப்பட்டதாயிருக்கிறது?

யுத்தத்தில் அதிகமானோர் செத்து மடிந்தனர். சொல்லிலடங்கா இன்னல்களுக்கும் முகம் கொடுத்தனர். அந்த ஞாபங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக்கூடியதொன்றல்ல. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் நாடு என்று சிந்திக்கும்போது விரைவாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எனது கருத்து. இலங்கை தமிழ் மக்கள் உலகில் எல்லா இடங்களிலும் முக்கியமான தொழில்களில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலேயே வசிக்கிறார்கள். இவர்களின் திறமைகள் இலங்கையின் வளர்ச்சிக்காக பயன்படவேண்டும். இல்லையெனில் மறுபடியயும் முரண்பாடுகள் வளர்வதை தடுக்கவியலாது.

சதீஸ் செல்வராஜ்

Leave A Reply

Your email address will not be published.