விண்வெளியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்,மார்ச் 1- பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான புதிய கிரகத்தை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b  என்றழைக்கப்படும் எக்ஸோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது. இது பூமியை விட  பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இந்த கிரகமானது K2-18 என்ற சிவப்பு நடசத்திரத்தை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிபகுதி நிலைகளும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எக்ஸோபிளானட் K2-18b கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.