அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோற்கடிக்கக்கூடிய ஒரு வலுவான எதிர்க்கட்சியை நாம் உருவாக்க வேண்டும் – அனுர குமார திசாநாயக்க
அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோற்கடிக்கக்கூடிய ஒரு வலுவான எதிர்க்கட்சியை நாம் உருவாக்க வேண்டும் என்றும் 71 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளதாகவும், அதன் முடிவுகளை மக்கள் அனுபவித்து வருவதாகவும் ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். கம்பாஹாவில் 2020 மார்ச் 01ம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாவட்ட மாநாட்டிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,
அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்குகளை பயன்படுத்தியவர்கள் தற்போது மக்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இவற்றை தோற்கடிக்கக்கூடிய ஒரு எதிர்கட்சியை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார். இதுவரை ஐக்கிய தேசிய கட்சியின் உள்முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு நேரத்தை ஒதுக்குவத்தை தவிர வேறு எதையும் அவர்களால் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
மேற்படி கம்பாஹா தேசிய மாநாட்டில் ஜே.வி.பி பிரச்சார செயலாளர் எம்.பி. விஜித ஹேரத், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோகா சபுமல் ரன்வல ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.