கொழும்பு நகர வாகன நெரிசலுக்குத் தீர்வாக இன்று முதல் படகு சேவை

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசியல் விமர்சகர்கள் தரைமார்க்க போக்குவரத்து மிகவும் மோசமாகவுள்ளதாகவும், பயணிகள் பயணம் செய்வதற்கு ஏற்ற பஸ் வண்டிகள் இல்லாதிருப்பதாகவும், அதேநேரம் பஸ் வண்டிகள் போதாமையால் பயணிகள் நெறுக்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும், வாகன இறக்குமதி தொடர்பில் முறையான திட்டம் இல்லாமல் இருப்பதாகவும், அநேகமானோர் தரை மார்க்கத்தையே பயன்படுத்துவதால் இதற்கும் சரியான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது சிரமம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.