ரவி, மகேந்திரன், பாலிசேன மற்றும் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு
முன்னாள் அரசு நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நால்வரையும் கைது செய்ய நீதிமன்ற உத்தரவினைப் பெறுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபதி அட்டர்னி ஜெனரல் டப்புலா டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.
ரவி கருணநாயக்க மற்றும் மற்றைய மூவரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பர்பசுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கசூன் பாலிசேன ஆகியாரை நீதிமன்ற உத்தரவைப் பெற்று கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் அவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாலேயே இவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.