முரண்பாடு தீவிரமடைகிறது – ரணில் துபாய்க்கு புறப்படுகிறார்

நேற்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஒரு முக்கியமான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க திடீரென துபாய் புறப்படுகிறார் .

இது திட்டமிட்ட சுற்றுப்பயணம் அல்ல என்று ஐ.தே.க தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு போட்டியிடும் என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழும்பியுள்ள அதேவேளை, சஜித் பிரேமதாசாவின் கட்சியும் நேற்று  பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தது.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கும் இடையிலான ஆரம்ப மோதல் தொடங்கிய அன்னச்சின்னம் தொடர்பிலானப் பிரச்சினை தற்போது குறையத் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க அன்னச் சின்னத்தை சஜித்துக்கு ஒப்படைக்க ஒப்புக் கொண்டதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகில விராஜ் கரியவாசம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்சிக்கு அறிவித்துள்ளார்.

இந்த மோதல்களுக்கு இடையில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் அவசரமாக துபாய்க்கு என்ன விடயமாக சென்றுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.