2 ஆண்டுகளில் 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் மரணம்… குஜராத் பாஜக ஆட்சியின் லட்சணம்

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத் அரசு மருத்துவமனை களில் 15 ஆயிரம் பச்சிளம்குழந்தைகள் மரணம் அடைந் துள்ளதாக அம்மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல் தெரிவித்துள்ளார்.குழந்தைகள் மரணம் தொடர்பாக குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பி னர். இதற்கு பதிலளித்து நிதின்படேல் மேலும் கூறியிருப்பதாவது:

“குஜராத்தின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2018-19-ஆம் ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன.இவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 71 ஆயிரத்து 774குழந்தைகள் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டனர். இந்த குழந்தைகளில் 15 ஆயிரத்து 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். அதாவது பிறந்த குழந்தைகளில் 21 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அகமதாபாத்தில் 4 ஆயிரத்து 322 பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. வதோதராவில் 2 ஆயிரத்து 362, சூரத்தில் ஆயிரத்து 986 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.”  இவ்வாறு நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.