பத்திரிகை இயக்குனர் பயங்கரவாத விசாரணைக்கு அழைக்கப்பட்டார் 

வவுனியாவை தளமாகக் கொண்ட ‘தினபுயல்’ செய்தித்தாளின் இயக்குனர் சக்திவேல்பிள்ளை மற்றும் அவரது துணைவியார் ஆகியோரை திங்கட்கிழமை (09) கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடர்பாக பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்த விபரத்தை அறிவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு முன்னர் , ‘தினபுயல்’ செய்தித்தாளின் ஆசிரியர் எஸ்.சசிதரனும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.