பட்டதாரி சங்கங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தன 

பயிற்சி நியமனங்களை  நிறுத்திவைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய பல அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று (05) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்த பட்டதாரிகளுக்கான தேசிய மையம், வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், வெளிவாரி பட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் திட சேவைகள் ஆகியவையே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளன.

அரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் இல்லை

மார்ச் 2 ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருந்து, அன்றைய தினம் பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்டது பட்டதாரிகளை சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலை வழங்க விரும்பினால், 2019 நவம்பர், டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி 31 வரை மூன்று மாத காலம் இருந்ததாகவும் பட்டதாரிகளுக்கான தேசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரியராச்சி கூறினார்.

இன்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பணியிடத்தில் முதல் வேலைநாளை உறுதி செய்வதல், நியமனக் கடிதங்கள் பெறாத அனைவருக்கும் முறையீட்டு கடிதங்களை வழங்குவதற்கு முறையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்தல், தெரிவு செய்யப்பட்டுள்ள  பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வலைத்தளம் மூலம் வெளியிடல் ஆகியவற்றுக்கு தான் ஒப்புக்கொண்டதாக சந்தனசூரியராச்சி தெரிவித்தார்.

பொதுச் சேவை ஆணையத்திடமிருந்தும் பின்னர் தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடமிருந்தும் வேலைவாய்ப்பை வழங்கல் தொடர்பபில் கலந்து பேசுவதற்கு அரசாங்கத்திற்கு போதுமான நேரம் இருந்தது.

ஆனால்,  அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை என்றும், 56,000 வேலையற்ற பட்டதாரிகள் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும்  பட்டதாரிகளுக்கான தேசிய மையம் சுட்டிக்காட்டுகிறது.

Leave A Reply

Your email address will not be published.