தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு
01.03.2020 திகதியன்று யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் ச்கதியின் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“மக்களுக்கு பொறுப்பு கூறும் மக்கள் சக்தியை கட்டியெழுப்பும்” எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் மாநாடுகள் நடைபெற்று வருகின்ற வேளையில், யாழ் மாவட்ட இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய புத்திஜீவிகளின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சூரியசேகரம், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஜிபுர் ரஹமான் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துக்கொண்டனர். பெரும்திரளான மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.