காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத் தாபனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு

28 பெப்ரவரி 2018ம் ஆண்டிலான காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தாபனமானது காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் நிலைகளை விசாரித்தல், அவர்களது உறவினர்களது உரிமைகளை பாதுகாத்தல், என்பனவற்றிற்கென பரந்த பணிப்பாணைகளை கொண்டதாக உண்மைகளைத் தாபிப்பதற்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்குமான அரசினது பொறுப்புணர்விற்கான வெளிப்படையான அறிதல்களினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருந்தது. காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களின் தொடரும் துன்பங்களினிடையே இது ஒரு மைல்கல்லாகும்.

அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் என்பன காணாமற்போதல் என்பதனை ஆயூதமேந்திய போராட்டம், அரசியல் அமைதிக்குலைவு மற்றும் குடியியல் குழப்பங்கள் உள்ளடங்கலாக சட்டவாட்சியானது கடுமையான பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அரச மற்றும் அரசற்ற பங்கேற்பாளர்கள் என இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த குற்றமாகவே சாராம்சப்படுத்தியிருந்தன. இவ்விசாரணை ஆணைக்குழுக்கள் மீளநிகழாமையை உறுதிப்படுத்தவதற்கான சீர்திருத்தினை தொடர்ச்சியாக பரிந்துரைத்திருந்ததோடு அவற்றில் பல இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியனவாகவுள்ளன. இச்சீர்திருத்தங்கள் தடுப்புக்காவல்: அவ்வாறு காணாமற்போனவர்களது நிலையை தாபிப்பதற்கான அளவீடுகள் மற்றும் காணாமலாக்கப்பட்டமைக்கான குற்றவாளிகளிற்கு எதிராக வழக்கு தொடுத்தல் என்பவற்றுடன் தொடர்புடையவற்றை சட்ட மற்றும் நிறுவனரீதியான சட்டகவேலையை பலப்படுத்துதல் என்பவற்றையும் உள்ளடக்குகின்றது.

பரந்தளவிலாக காணாமலாக்கப்படுதல் என்பது ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாயினும் காணாமலாக்கப்பட்டுள்ளவர்களது மொத்த எண்ணிக்கை தொடர்பாக இதுவரையில் இலங்கை எந்தவொரு தொகையினையும் கொண்டிருக்கவில்லை. குறிப்பிட்ட காலம் மற்றும் பிராந்தியங்களை விசாரிப்பதற்கான பணிப்பாணைகளை கொண்ட கடந்தகால விசாரணை ஆணைக்குழுக்கள் வித்தியாசமான தொகைகளை அறிக்கையிட்டுள்ளன.

1983 – 2009 வரையிலான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் காணாமற்போதல்களை விசாரிப்பதற்கான பணிப்பாணையுடனான பரணகம ஆணைக்குழுவானது தனக்கு 21,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அறிக்கையிட்டுள்ளது. அதேபோல 1988-1997 இற்கிடையில் மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் காணாமலாக்கப்படுதல்களை விசாரிப்பதற்கான பணிப்பாணைகளையுடைய வலய ஆணைக்குழவானது தனக்கு 8,739 முறைப்பாடுகளை பெற்றதாக அறிக்கையிடுகின்றது.

காணாமலாக்கப்படுதல்கள் கடந்த காலத்தின் பிரச்சினைகளாக கூறப்பட்டாலும் அப்பேரழிவின் விளைவுகளின் தொடர்ச்சி இன்னமும் குடும்பங்களால் உணரப்பட்டனவாகவுள்ளன. எனினும் சில குடும்பங்கள் நிர்வாகத் தேவைகளிற்காக மரணச் சான்றிதழைப் பெறுதலைத் தவிர வேறு தெரிவில்லாது இருந்தாலும் தமது அன்புக்குரியவரின் நிலையை அறியமுடியாது தாங்கொணாத் துயரிலேயே வாழ்கின்றனர். அவர்களிற்கான பதிலினை வழங்குவதிலான அரசின் தோல்வியானது அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்புவார்களென்ற நம்பிக்கையினை பற்றியிருக்க காலாயிற்று. குடும்பத்தினர் துன்பத்திற்கு முடிவூகாண முடியாதவர்களாகவும்; மற்றும் சிலர் காணாமற்போன தமது அன்புக்குரியவர்களின் ஞாபகார்த்தமாக இறுதிக்கிரியைகளை நடாத்தலாமா என்பதை நிச்சயிக்கமுடியாதும் மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பல சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மகன் எனும் குடும்பத்திற்காக உழைப்பவர்கள், இளம் பிள்ளைகளையும் வயோதிக பெற்றௌர்களையும் விட்டுவிட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர். மனைவிமார் அல்லது பெற்றௌர் தமது அன்புக்குரியவரை தேடும் அதேநேரம் வருமானத்தை ஈட்டவும் குடும்பத்திற்கு பாதுகாப்பளிப்பதும் என இரு சவால்களை எதிர்கொள்ளவேண்டியவர்களாக காணப்பட்டனர்.

தனது பணிப்பாணையை செயற்படுத்துவதற்காக, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது குடும்பங்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரச நிறுவனங்கள், முந்தைய விசாரணை ஆணைக்குழுக்களினது அனுபவங்கள், நல்லிணக்க பொறிமுறையிற்கான ஆலோசனைச் செயலணியின் பரிந்துரைகள் மற்றும் ஏனைய நாடுகளின் ஒத்த பணிப்பாணைகளை உடைய நிறுவனங்களின் அனுபவங்கள் என்பவற்றினால் அறிவுறுத்தப்பெற்றது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது எதிர்ப்பினையும் அரச நிறுவனங்கள் மீது நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தியும் இப்பிரச்சினைகளில் சர்வதேசத் தலையீடுகளை கோரியமையும் உள்ளடங்கலாக கோபத்தினையும் துயர்களையூம் வெளிப்படுத்திய ஆயிரக்கணக்கான குடும்பங்களை சந்தித்துள்ளது.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அனைத்து குடும்பங்களையும் ஈடுபாடுகொள்ளச் செய்ய முயன்றுள்ளதுடன் அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசின் விருப்பத்தினையும் இயலுமையிலும் நம்பிக்கை கொள்ள அறிவுறுத்தியுமுள்ளது. குறிப்பாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அரசானது உண்மையை தாபிக்காது அல்லது நீதியை உறுதிப்படுத்தாது இழப்பீட்டினை மாத்திரமே வழங்கும் என்ற அச்சத்தினை போக்க முயன்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழிகளிலான நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தல் மற்றும் உதவுதல் உள்ளடங்கலாக விசாரணைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்றுள்ள வழக்குகளில் பங்குபற்றவும் மனித எச்சங்கள் மற்றும் தடுப்பு காவல் நடைமுறைகளிலும் அடையாளப்படுத்தல் செயன்முறைகளிற்கான சட்ட மறுசீரமைப்புகளிற்காகவும் வாதாடியுள்ளது.

கஷ்டப்படும் குடும்பங்களின் பொருளாதார கடினத்தன்மையை உணர்ந்து, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அக்குடும்பங்களிற்கு 2019 டிசெம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட மாதாந்தம் ரூபா. 6000  எனும் இடைக்கால நிவாரணத்தை பரிந்துரைத்தது. நமது நாட்டில் பரந்தளவில் இடம்பெற்ற காணாமலாக்கப்படுதலினை அறியத்தருவதற்குள்ள அரசின் கடப்பாட்டினை அறிந்துஇ காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது கடந்த இரண்டு வருடங்களாக காணாமல் போனோரிற்கான சர்வதேச தினத்தினை நினைவுகூர்ந்துள்ளது. மேலும் ஆயூத நடவடிக்கைகளில் காணாமற்போன முப்படையினர்; உள்ளடங்கலான தற்போதிருக்கும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, பெப்ரவரி 2020ல் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களது தற்காலிக பட்டியலைத் தயாரித்துள்ளதுடன் காணாமலாக்கப்பட்ட அன்புக்குரியவர்களது பெயர் அத்தற்காலிக பட்டியலிலுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக குடும்பங்களிற்கும்; அழைப்புவிடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களிற்கான இணை அணுசரணையிலிருந்து விலகுவதற்கான அரசாங்கத்தின் சமீபகால முடிவானது தமது அன்புக்குரியவர்கள் காணாமலாக்கப்பட்டமைக்கான பதிலினை கண்டடைதல் தொடர்பான தமது எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்பது குறித்த கேள்விகளை குடும்பங்களின் மனங்களில் எழுப்பியுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது உள்நாட்டு சட்டங்களின் கீழான இலங்கையர்களின் உரிமைகள், சர்வதேச சட்டங்களின் கீழான இலங்கையின் கடப்பாடு, முன்னைய விசாரணை ஆணைக்குழக்களின் பரிந்துரைகள், குடும்பங்களின் கோரிக்கைகள், மற்றும் தமது அன்புக்குரியவர்கள் காணாமற்போயுள்ள குடிமக்களிற்கான அரசின் சட்ட மற்றும் தார்மீக கடப்பாடுகள் என்பவற்றிலிருந்து எழும்
பொருத்தமான பணிப்பாணைகளுடன் கூடிய ஒரு பொறிமுறைக்கான தேவையை உணர்ந்துள்ளது.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வினைத்திறனாக செயற்பட, அரசாங்கத்தினதும் அரச நிறுவனங்களினதும் பாரிய ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்பதை குறிப்பிடுகின்றோம். காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்கள் காணாமற்போதல் மற்றும் காணாமலாக்கப்பட்டமைக்கான காரணங்களை தேடுவதற்கும் காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களுடன் தொழிற்படுவதற்கும் அவர்கள் சார்பாக வாதாடுவதற்கும் தொடர்ந்தும்
உறுதியாகவுள்ளனர்.

சாலிய பீரிஸ்
சனாதிபதி சட்டத்தரணி
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

 

Leave A Reply

Your email address will not be published.