கம்யூனிசத்திற்கு வாழ்த்து!!

அது கடினமானதல்ல,
சட்டெனப் புரிந்துகொள்ளக்கூடிய
எளிமை உள்ளது அது
நீ சுரண்டல்வாதியல்லன்
எனவே அதை நீ எளிதில் புரிந்து கொள்ள முடியும்
அது உன் நன்மைக்கு வழி,
எனவே அதைப் பற்றி அறிந்துகொள்.
அதனை மடமை என்போர் மடையர்
அது மோசம் என்போர் மோசடிக்காரர்
மோசடிகளுக்கு எதிரானது அது.
சுரண்டல்வாதிகள் அதனைக் கிரிமினல் ஆனது என்பர்
ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும்.
கிரிமினல் ஆன யாவற்றையும் அது முடிவுகட்டும்
அது கிறுக்குத்தனமானதல்ல
கிறுக்குத்தனங்கள்
முழுவதுக்கும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல. ஒழுங்கு.
எளிமையான விஷயம் தான்
செய்யக் கடினமானது.

பேர்டோல்ட் பிரெஸ்ட்
தமிழில் – பிரமின்

Leave A Reply

Your email address will not be published.