கொவைட்-19 தடுப்பில் சீனாவின் முக்கிய அனுபவங்கள்: சுகாதார வல்லுநர்கள்
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தைரியம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றுடன், ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டு நடவடிக்கைளை சீனா மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, பிப்ரவரி 29 ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனா – உலக சுதாகார அமைப்பின் கூட்டு ஆய்வு அறிக்கையில், தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, ஜப்பான், ரஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தென் கொரியா, உலக சுகாதார அமைப்பு ஆகியற்றைச் சேர்ந்த 25 வல்லுநர்கள், சீனாவில் 9 நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்ட பிறகு வழங்கிய அறிக்கை இதுவாகும். எனவே, இது நம்பகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரின் உயர்நிலை ஆலோசகரும், இந்த கூட்டு ஆய்வுக் குழுவின் வெளிநாட்டுத் தரப்புத் தலைவருமான முனைவர் புருஸ் ஏல்வார்ட், சமீபத்தில் பெய்ஜிங் மற்றும் ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டு செய்தியாளர்கள் கூட்டங்களில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், சீனாவில் சிகிச்சை பெற விரும்புகின்றேன் என்றும், சீனாவின் நடவடிக்கை நாங்கள் அறிந்து கொண்ட வரை நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான உண்மையான வழிமுறையாகும் என்றும், சீனாவின் தொழில்முறைச் சமாளிப்பு இயக்க முறையை பிற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டுக் கள ஆய்வு அறிக்கையில், சீனாவின் நடவடிக்கை, உலகளவில் கொவைட்-19 வைரஸைச் சமாளிப்பதற்கு முக்கிய அனுபவங்களை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வூஹான் நகரில் முடக்கு நடவடிக்கை, விரைவாக தொற்று கொண்டவர்களைத் தேடுவது, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு உடையவர்களைப் பின்பற்றி அவர்களை தற்காலிகமாக தனிமைப்படுத்துவது போன்ற செயல்பாடுகள், சர்வதேச சமூகம் கற்றுக் கொள்ளத்தக்கவை என்று புருஸ் ஏல்வார்ட் கூறினார்.
அசோசியேட்டட் பிரஸ் எனும் அமெரிக்க செய்தி நிறுவனம் பிப்ரவரி 29 ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், புதிய வைரஸை முழுமையாக அறியாத நிலையிலும், பயன்மிக்க மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லாத நிலையிலும், சீனாவை போல முடக்கு நடவடிக்கையை மேற்கொள்வது, வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான மிக சிறந்த வழிமுறையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸுக்கு நாட்டின் எல்லை இல்லை. பல்வேறு நாடுகளும் கண்டிப்பாக அதைச் சமாளிக்க வேண்டும். ஆனால், அளவுக்கு மீறி பீதி அடைய வேண்டாம். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் சொல்வதைப் போல, உரிய நடவடிக்கை மேற்கொண்டால், வைரஸ் பரலைத் தடுக்க முடியும். இது சீனாவில் இருந்த கிடைத்துள்ள முக்கிய அனுபவத் தகவல் ஆகும்.