இலங்கையில் முதல் கொரோனா நோயாளி… ஒரு சுற்றுலா வழிகாட்டி…

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் கோரோனா நோயாளி தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நோயாளியின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ஊடகப்பிரிவானது, கோவிட் -19, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது என்றும், இதனை தடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும் செய்திக்குறிப்பை வெளியிட்டது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் நேற்று (10)  இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜசிங்க கூறினார்.

தற்போதைய தகவல்களின்படி, கொரோனா பாதிப்புக்கு உற்பட்டு அடையாளம் காணப்பட்ட நபர் 52 வயதான ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆவார். கடந்த சில நாட்களாக, அவர் இத்தாலிய சுற்றுலாப் பயணிகளின் குழுவுக்கு சேவை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் அவர்கள் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்களைப் பெறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.