சீனா இத்தாலிக்கு உதவ வருகிறது
இத்தாலியின் வடக்கின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதோடுஅங்குள்ள சுகாதார அமைப்புகளும் கொரோனாவின் தாக்கத்தைச் சமாளிக்க சிரமப்படுவதால் இந்நேரம் சீனா இத்தாலிக்கு உதவ முன்வருகிறது.
வைரஸ் முதன்முதலில் தோன்றிய வுஹானில் தொற்றுநோயை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி தடைசெய்துள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் அறிவித்திருந்தார்.
சீனா இச்சக்திவாய்ந்த சமிக்ஞையோடு, தற்போது இத்தாலிக்கு உதவி அனுப்புகிறது.
சீனா 100,000 ஃபேஸ் மாஸ்க், 20,000 பாதுகாப்பு கவச ஆடைகள் மற்றும் 1,000 வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளது. சீன செஞ்சிலுவை சங்கம் இத்தாலிக்கு ஒரு மருத்துவ குழுவை அனுப்புவது குறித்தும் ஆலோசித்து வருவதாக சீன அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.