கொரோனா வைரஸ் ஜெர்மனியில் 70% ஆனோரை தொற்றலாம் – மேர்க்கெல்
ஜேர்மனிய நாட்டின் மக்கள் தொகையில் 70% ஆனோர் (சுமார் 58 மில்லியன் பேர்) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதன்கிழமை இடம்பெற்ற செய்தி மாநாடொன்றில் திருமதி மேர்க்கெல் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுடன் சேர்ந்து இதனைக் கணித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அறியப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லாததால், வைரஸ் பரவுவதை குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் இது வெற்றிக்கான நேரம் என்றும் அவர் கூறினார்.
இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் பிற இடங்களை மூடுவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.