பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம்

2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 19ஆம் திகதி பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ள அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இன்று சந்திக்கவுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்மாதம் 16 ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.