கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு சீனா ஆதரவு

இலங்கைக்கான  சீனத் தூதர் ஹுவாய் ஹுசுய் இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு  சீன அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் சீனா கடுமையான பேரழிவை எதிர்கொண்டிருந்தபோது இலங்கை மக்கள் அளித்த ஆதரவை சீன ஜனாதிபதி பாராட்டியதாகவும்  இலங்கைக்கான சீனாவின் செயல் தூதர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால், சீன அரசு இலங்கை அரசாங்கத்திற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் உட்பட எந்தவொரு ஆதரவையும் வழங்க சீனா ஒருபோதும் தயங்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.