ரவி கருணாநாயக்க நீதிமன்றில் ஆஜர்!
கைது செய்வதற்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க உட்பட பினைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட நால்வர் சற்று முன்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பெப்பர்ஸுவல் ஸ்டஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட நால்வரையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்பதாக ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களுக்கு எதிராக எந்தவொரு தடை உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்ற கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.