தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை விடுவித்தது காஷ்மீர் நிர்வாகம் 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதன்மைச் செயலாளர் ஷலீன் காப்ராவினால், “செப்டம்பர் 15-ம் திகதி பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது திரும்பப் பெறப்பட்டதோடு, அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஏறக்குறைய 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை இன்று விடுவித்த காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை  இந்திய மத்திய அரசு திரும்பப் பெற்றிருந்தது.

இந்த நடவடிக்கை எடுக்கும் முன்  முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் வீட்டுக் காவலில் வைத்தது. அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிருவாகம் அறிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களில் தற்போது பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டாலும் மீதமுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் இன்னனும் விடுவிக்கப்படவில்லை.
Leave A Reply

Your email address will not be published.