இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று! பேதங்கள் கடந்து இலங்கையராய் நாம் ஒன்றுபட வேண்டும்!!

இதுவரை 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 9 இலங்கையரும் 1 சீன பிரஜையும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அலுவலகங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் பலவிடங்கள் மூடப்படுகின்றன.

இலங்கையில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளைப் பார்வையிட இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் உள்ள சினிமா திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுவிக்கும்வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா அச்சத்தினால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அச்சம் கொள்வதினால், பொது கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும் பொதுத் தேர்தலும் பிற்போடப்படலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றன.

தற்போது இலங்கை பாரிய ஆபத்தில் இருப்பதால் அனைவரும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை கடந்து இலங்கையராய் ஒன்றுசேர வேண்டும் என்றும், கொரோனா தொற்றை தடுப்பதற்கான சரியான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்படவேண்டியது உசிதம் என்றும் தேசம் வலியுறுத்துகிறது.

இலங்கை தேசத்தை மீட்டிடவும் உயிர்களை காத்திடவும் மருத்துவத் துறைசார்ந்தோர், உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், புத்திஜீவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் தயாராக வேண்டும் என்றும் ”தேசம்” கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.