தேர்தல் ஆணைக்குழு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது

நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேராபத்து குறித்து கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு இன்று (ஜன. 16) சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜசிங்க மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பொதுத் தேர்தல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றியும், தேர்தலை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்பது பற்றியும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.