கொரோனா தொற்றுக்குள்ளானோர் 21 ஆக உயர்வு! இலங்கையில் பிரதான நகரங்களில் மனித நடமாட்டம் குறைவடைந்துள்ளது!!

கொரோனா தோற்று பரவும் அச்சுறுத்தலால் திங்கட்கிழமை அரசவிடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் பிரதான நகரங்களில் மனித நடமாட்டம் குறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

அதேநேரம், தற்போதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் நாளைய தினம் அரசாங்கம் அரச விடுமுறை வழங்காதது என்ற அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், நாட்டில் பொது விடுமுறையை ஒரு வார காலம் நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் விமர்சகர்கள், தொடர்ந்து அரச விடுமுறை வழங்கப்படுமானால் நாடு பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்றும், இதனால் நாள் வருமானத்தை நம்பி வாழுவோர் பலர் பாதிக்கப்படுவர் என்றும், இதற்கான சரியான வேலைத்திட்டத்தைத் தயாரித்து தற்போது செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு நகரம்

மட்டக்களப்பு நகரம்

Leave A Reply

Your email address will not be published.