சிறுபிள்ளைகளை நிர்வாணமாக்கி தாக்கியதற்காக சந்தேக நபர் ரிமாண்ட் செய்யப்பட்டார்
மூங்கிற் குழாய் விளையாட்டுத் துப்பாக்கி செய்வதற்காக மூங்கில் வெட்டச் சென்ற இரண்டு சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை தம்புள்ள நீதவான் ஜெயம்பதி ரத்னதிவாகர 17ம் திகதிவரை சிறைவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கலேவெலையைச் சேர்ந்த 14 மற்றும் 12 வயது சிறுவர்களே சந்தேக நபரின் தோட்டத்திற்கு சென்ற வேளையில் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.