இன்று முதல் மூன்று நாட்கள் அரச விடுமுறை

கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு இன்று (17) முதல் மூன்று நாள் விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

வைரஸ் தாக்கத்தைப் பொறுத்து  விடுமுறையை நீடிப்பதா? அல்லது இல்லையா? என்பது பற்றி கவனத்தில் கொள்ளப்படும் என்று பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அரசு நிறுவனங்கள், வங்கி என்பவற்றுக்கு வணிக விடுமுறை தினம்  அறிவிக்கப்பட்டன.

இன்று முதல் மூன்று நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது சுகாதாரத் துறைக்கு செல்லுபடியாகாது என்றும்  சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கூறுகிறார்.

நேற்றைய தினம் தெரன  தொலைக்காட்சியில் 360 நிகழ்ச்சியில் ஜே.வி.பி தலைவர் ”திங்கட்கிழமை அரசாங்கம் விடுமுறை அளிக்கிறது. செவ்வாய்க்கிழமையில் இருந்து மறுபடியும் வேலை. ஏன் இப்பொது கொரோனா தாக்கம் நின்றுவிட்டதா? அல்லது திங்கட்கிழமை மாத்திரம் கொரோனா உருவாகிறதா? திங்கட்கிழமை கடவுளிடம் முறைப்பாடு  செய்யும் நாள் போன்றதா? இல்லை. தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த அரசாங்கம் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்காக ஏனைய 3 தினங்களை விடுமுறை நாளாக அறிவிக்காமல் இருக்கிறது .” என்றார்.

இவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு அரை மணித்திலாலங்கள் செல்வதற்கு முன்பாக, அந்த நிகழ்ச்சிக்கு இடையில் ‘பிரேக்கிங் நியூஸ்’ வெளியிடப்பட்டு மேலும் மூன்று நாட்களுக்கு அரசவிடுமுறை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.