கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ்

கொரோனா தொற்று பரவல் குறித்து கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், உலக அளவில் பல அரசுகளும் இந்த தொற்றை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அரசுகள் கொரோனா தொற்று சோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

”கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழுவதுமாக அறியாமல் இந்த தொற்று பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

”அனைத்து நாடுகளுக்கும் ஒரு செய்தியைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோதனை செய்யுங்கள்! சோதனை செய்யுங்கள்! என்பதுதான் அது” என்றார் அவர்.

(BBC தமிழ்)

 

Leave A Reply

Your email address will not be published.