பிரான்ஸ் எல்லையையும் மூடுகிறது தேர்தல்களையும் ஒத்திவைக்கிறது
நாளை (18) பிற்பகல் முதல் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டின் எல்லைகள் மூடப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
பிரான்ஸ் முழுவதும் குடும்பக் கூட்டங்கள் மற்றும் பிற சமூகக் கூட்டங்கள் நடைபெறலாகாது என்றும், பிரெஞ்சு தேர்தலின் இரண்டாவது சுற்று ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பாரிசில் உள்ள அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மூடப்படும் என்றும், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக நாடு கடும் யுத்தத்தில் இருப்பதாகவும் மக்ரோன் தெரிவித்தார்.