கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இரு வாரங்களுக்கு மூடப்படுகிறது!
இன்று (17) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கைக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
தம்பதிவ வழிபாட்டுக்குச் சென்றுள்ள 891 பேரை கொண்டுவர இரண்டு சிறப்பு விமானங்களைப் பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.