தென்கொரியாவில் திடீரென அதிகரித்தது கொரோனா தொற்று! இதுதான் காரணமா?
தென்கொரியாவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மிகச்சில நாட்களிலேயே அநேகருக்கு கொரோனா தொற்று வேகமாக பரவியுள்ளது.
இதற்கான கரணம் என்னவென்று ஆராய்ந்த போது கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் ஒரே போத்தல் மூலம் கொடுக்கப்பட்ட உப்பு நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது.
தென்கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனாவுக்கு எதிரான சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. தேவாலயத்தின் அங்கத்தினராக 140பேர் இருக்கும் நிலையில் 90 பேர் இந்த வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர். வழிபாட்டுக்கு பின் அனைவருக்கும் உப்பு நீர் வழங்கப்பட்டுள்ளது. ஒரே போத்தலில் வைத்து வாய்க்குள் படும்படி அந்தநீரை கொடுத்துள்ளனர். இதனால் தற்போது கொரோனா பரவியுள்ளது.
இந்த தகவலை தென்கொரிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஏனையோரும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதிரியார் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதேபோன்றொரு இன்னொரு சம்பவமும் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் தொற்று ஏற்பட்டிருந்த குறித்த பெண்மணி தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது, தான் தேவன் பிள்ளை எனக்கூறி மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்த்துள்ளார். அதன்பின் அவர் பல தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செத்துள்ளார். குறிப்பாக 10,000 பேர் வரை கூடியிருந்த வழிபாடு ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளனர். இதன் போதே அநேகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பெண்மணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுளார். ஏனையோரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.