சோசலிச கியூபாவும் கொரோனா வைரஸும்

சோசலிசம் காலாவதியாகிவிட்டது. இது மிகவும் ‘அப்செட்டாக’ உள்ளது. இது இப்போது பொருந்தாது. சோசலிசத்தைப் பற்றி பலர் இவ்வாறுதான் கூறுகிறார்கள். அது உண்மையான விடயம் அல்ல. அது முதலாளித்துவ ஆட்சியாளர்கள் விதைத்த கருத்தியலாகும். அவர்கள் இந்த சுரண்டல் அமைப்பைப் பேணுவதற்காக சோசலிசத்தைப் பற்றி எமது தலைக்குள் புகுத்தி பிசாசுதான் அது.

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 7,000 பேர் இறந்துள்ளனர். ஆனால் கொரோனா வைரஸுக்கு உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எனக் கூறுப்படுகின்ற எவராலும் ஒரு மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தாலி ஒரு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் வளர்ச்சியடைந்த நாடுகளால் செய்ய முடிந்துள்ளது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பாதிக்கப்படும்போது அவைகளை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு பதில் இல்லை.

ஆனால், சோசலிச கியூபா திருப்திகரமான பதிலை கண்டுபிடித்துள்ளது. அதுதான் வைரஸ் தடுப்பு மறுசீரமைப்பு இன்டர்ஃபெரான் ஆல்ஃபா 2 தடுப்பூசியின் கண்டுபிடிப்பு. சீனா இப்போது அதைத்தான் பாவிக்கிறது. அதனால் சீனாவில் கொரொனா நோயாளிகள் குறைந்து வருகின்றனர். அந்த தடுப்பூசியை கியூபர்கள் விற்பதில்லை. அவர்கள் உலகின் பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கத் தயாராக உள்ளனர். மனித இருப்புக்காக கண்டுபிடிப்புகள் செய்வதைத் தவிர அவர்கள் இலாபத்திற்காக எதுவும் செய்வதில்லை. சோசலிசம் அப்படித்தான்.

எமக்கு நினைவிருக்கிறதா சமீப காலங்களில், இலங்கையின் மருந்தகங்களில் 60 ரூபாவுக்கு இருந்த முகமூடி ரூ 500க்கு விகற்ப்பட்டது. சிலர் அதை மொத்தமாக எடுத்தனர். அண்மையில் முதலாவது கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டபோது ஃபுட் சிட்டிகள் யாவும் காலியாகிவிட்டது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்திலும் வரிசைகள் நிறைந்து காணப்படுவதை கண்டோம்.

சில நிலையங்களில் எண்ணெயை பதுக்கி மறைத்து வருவதாகவும் கூறப்பட்டது. கடைகளில் அரிசியை மறைத்து பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆசிரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் 3000 இருந்து 17000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. முதலாளித்துவம் அப்படித்தான்.குறுகிய தனியுரிமை, சுயநலம் மற்றும் லாபத்தை மட்டும் ஈட்ட ஆர்வம் கொண்ட இந்த அமைப்புக்கு கூடுதல் எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. அத்தகைய அமைப்பிடம் மனிதகுலம் மனிதத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒருபோதும் முடியாது!

கியூபா போன்ற மனிதாபிமான கொள்கைகளை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரு அரசாங்கத்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ராம் 

Cuba has medicines for thousands of possible cases of COVID-19

Leave A Reply

Your email address will not be published.