மட்டக்களப்பில் முதல் கொரோனா நோயாளி அடையாளங் காணப்பட்டார்

மட்டக்களப்பில் கொரோனா நோயாளியொருவர் அடையாளங் காணப்பட்டு சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் லண்டனில் வருகைத் தந்திருந்த குறித்த நபர் தனது குடும்பத்தவருடன் உல்லாசப்பயணகளையும் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னரே இவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சுற்றத்தின் நலன்கருதி தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது மிக அவசியமாகும்.

Leave A Reply

Your email address will not be published.