நாத்தாண்டியாவில் 65 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது

நாத்தாண்டிய  MOH பிரிவில் வசிக்கும் இத்தாலியைச் சேர்ந்த 65 பேருக்கு மாரவில நீதவான்  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாத்தாண்டிய சுகாதார மருத்துவ அதிகாரி உபுல் ஜெயதிலக சம்ரப்பித்த கோரிக்கைக்கிணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நோட்டிஸ் அனுப்பப்பட்டவர்கள் அத்தியாவசிய மனிதாபிமான காரணங்களைத் தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி  14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் அறிய முடிகிறது.

மார்ச் 1 முதல் 9 வரை தனிமைப்படுத்தப்படாமல் சுமார் 2,000 பேர் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பெரிய சவால் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.