கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையகம் பொதுத் தேர்தலை பிற்போடும் என நாங்கள் நம்புகின்றோம் – ம.வி.மு பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா

தம்மால் அழைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தலை கொரொனா அச்சுறுத்தலின் காரணமாக திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்காததினால் தேர்தல் ஆணையகம் அந்த முடிவினை எடுத்து பொதுத் தேர்தலை பிற்போடும் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா தெரிவிக்கிறார்.

அவர் இன்று (18.03.2020) ம.வி.மு தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்த தோழர் ரில்வின் சில்வா…

“தற்போது தேர்தலை நடத்துவது தொடர்பிலும் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது இதனை கவனத்தில் கொள்ளவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தவிட்டால் தேர்தல்ஆணையகம் அது பற்றிய கவனத்தை செலுத்துமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்..

பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியென்ற வகையில் இத்தருணத்தில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. ஆட்களை கூட்டுவதற்குஇ பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதேபோன்று தேர்தல் ஆணையகத்திற்கு தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிக்கல் இருக்கிறது. ஊழியர்களுக்கு செயலமர்வுகளை நடத்துவதற்குஇ பயிற்சிகளை நடத்துவதற்குஇ இலட்சக் கணக்கான ஊழியர்களை நியமிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையகம்முடிவொன்றை எடுக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணையகத்தால் அந்த முடிவினை எடுக்க முடியாது. வேட்பு மனுக்களை ஏற்றுகாண்ட நாள் முதல் தேர்தல் ஆணையகத்திற்கு அதற்கான அதிகாரம் கிடைக்கிறது. அரசாங்கம் கீழ்தரமான தந்திரோபாயங்களையே பின்பற்றுகிறது. ஜனாதிபதிக்கு தேவையாக இருந்தால் பாராளுமன்றத்தை செயற்பட வைத்து தேர்தலை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகயை எடுத்திருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாகவே நடந்துக்கொள்கிறது.

ஜனாதிபதி தலையிட்டு தேர்தலை பிற்போடுவதற்குப் பதிலாக தேர்தல் ஆணையகம் அதற்கான முடிவினை எடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதன்போது தேர்தல் பிற்போடப்பட்டாலும் பாராளுமன்றம் இல்லாது முடிவுகளை எடுப்பதற்கு அரசாங்கதிற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது அரசாங்கத்தின் மிகவும் அசிங்கமான அரசியலாகும். இவ்வாறான வேளையில் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக்கொளவதாவது இவ்வாறான அனாத்தம் ஏற்பட்டிருக்கிற வேளையில் அசிங்கமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டாமென கெட்டுக்கொள்கின்றோம்.

நாம் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் எமது அரசியல் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் தினத்தை இரத்துச் செய்யாததால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.