இந்தச் சூழல் எல்லாவற்றுக்கும் முடிவு அல்ல! நோய் பரவுதல் அடங்கியவுடன் சிறந்த சூழலை உருவாக்க முயற்சி செய்வோம்! – கேரளா முதல்வர்

இந்தச் சூழல் எல்லாவற்றுக்கும் முடிவு அல்ல. நோய் பரவுதல் அடங்கியவுடன் சிறந்த சூழலை உருவாக்க முயற்சி செய்வோம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனித நேயத்துக்கு எதிரான செயல்களில் நாம் ஈடுபடக்கூடாது. சுற்றுலாபயணிகளுக்கு மனிதநேயமற்ற முறையில் நாம்  செயற்படுவோமானால் நமது மாநிலத்தின் மீதான நல்ல எண்ணத்தைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் 151 பேர் கொரோன வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, மூவர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.