வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கைக்கு
நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காணப்படுவதால், பொதுத் தேர்தலைப் பிற்போட்டு மறுபடியும் பாராளுமன்றத்தைக் கூட்டி செயற்பட ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணியோடு நிறைவுக்கு வருகிறது. இதன் பின் தேர்தலை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கைக்கு செல்லுகிறது.
அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதா? அல்லது பிற்போடுவதா? என்பது பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நண்பகல் 12 மணியோடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அடுத்த தேர்தல் குறித்த விபரத்தை அறிய தேர்தல் ஆணைக்குழுவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.