மஹிந்த அமரவீரவின் மகன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சராகிய மஹிந்த அமரவீரவின் மகன் உட்பட ராயல் மற்றும் வியாபாரக் குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சிலரும் கடந்த 17ம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவுடன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த அமரவீரவின் மகன், லக்ஷமன் வசந்த பெரேராவின் மகன், மஹிந்த யாப்பாவின் மகன், மஹிந்தானந்த அலுத்கமகேவின் மகன் மற்றும் தொழிலதிபர் தம்மிக பெரேராவின் மகள் உள்ளிட்டோரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் உறவினர்களுக்கு மாத்திரம் இவ்விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலர்  இன்னும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் சிக்கியுள்ளனர்.

இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஒன்றாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்த அரசாங்கம்,  அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கவனிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.