கொரோனா வைரஸை எதிர்க்க ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், திங்களன்று அசோசியேட்டட் பிரஸ் (AP) க்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு கோரியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது என்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

ஈரானில் உலகின் மிக மோசமான கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  ட்ரம்ப் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு இப்பிரச்சனைக்கு தனியாக முகம் கொடுக்க முடியாது என்றும், புதிய கொரோனா வைரஸ் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை அழிக்கும் என்று அஞ்சுவதாகவும், உலகின் ஏழ்மையான நாடுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.