வீடற்ற 60,000 பேரை கோரோனா வைரஸ் தாக்கலாம் – கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம்
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் காணப்படும் 60,000 வீடற்றவர்கள் அடுத்த 8 வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகலாம் என்று கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா வல்லுநர்களின் ஆய்வில் இருந்தே இத்தகவல் பெறப்பட்டுள்ளதற்காகவும் அவர் தெரிவித்தார். அடுத்த எட்டு வார காலப்பகுதியில் மாநிலத்தின் 108,000 பாதுகாப்பற்ற மக்களுக்களில் 56 சதவீதமானோருக்கு இவ்வாறு வைரஸ் தாக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.