வாய்ப்பு முடிந்தது

உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கைமீறிவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

எனவே, தனிமைப்படுத்தவும், ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் அரசாங்கங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த அமைப்பின் கூற்றுப்படி, 80 சதவீதத்திற்கும் அதிகமான பதிவுகள்  ஐரோப்பிய மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளைச் சேர்ந்தவை என்று அறிய முடிகிறது.

தற்போதைய நிலைமை குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் அவர்கள், தேசியம், இனம், தோல் நிறம் அல்லது வங்கி கணக்கு இருப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட தரப்பினர் மீது இப்பிரச்சனையைத் திணிக்க முயலாது செயற்படுமாறு அவர் வலியுறுத்தினார்.

புதிய கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிகழ்வில் பேசிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடோனோம் கிராபிரேசாஸ், ஒரு புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும்,  இந்த கண்டுபிடிப்பு சமீபத்திய சாதனை என்றும் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.