ஒருத்தரும் வெளியே வரக்கூடாது – ஊரடங்கு சட்டத்தப் பிறப்பித்தது இலங்கை அரசு

கடும் மோசமான நிலைமை தற்போது காணப்படுவதால், முழு இலங்கைக்கும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டத்தைப் அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இத்தகவலை போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

புத்தளம், சிலாபம். கொச்சிக்கடை மற்றும் ஜா-எல விற்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காலை 9 மணியோடு தளர்த்தப்பட்டதோடு, மறுபடியும் பிற்பகல் 2 மணியோடு அப்பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், அது பரவாமல் தடுக்கவுமே இவ்வாறான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக, இனி பொதுமக்கள் வெளியில் உலாவுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

Leave A Reply

Your email address will not be published.