தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பசில் ராஜபக்ஷ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கியவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், தாமரை மாவத்தையில் (நெலும் மாவத்த) அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் பணிபுரிந்தோர் மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் நெருக்கமாகவிருந்தோரில் பலர் இவ்வாறு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரக்காபொல மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இவருடன் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டதற்காக பசில் ராஜபக்ச தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தனது குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும் தான் தனிமைப்பட்டுள்ளதாக இணையத்தள செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் பெயர் குறிப்பிடப்படாத பல அரசியற் பிரமுகர்களும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் கசிகிறது.