இத்தாலிக்கு உதவ சென்றது கியூப மருத்துவர்கள் படை

இத்தாலியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியமான லோம்பார்டிக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ இந்த வார இறுதியில் முதன்முறையாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் படைப்பிரிவை அனுப்பியதாக கியூபா தெரிவித்துள்ளது.

கியூபா  தனது “மருத்துவர் படைகளை” 1959 புரட்சிக்குப் பின்னர்  உலகெங்கிலும் உள்ள பேரழிவு தளங்களுக்கு (பெரும்பாலும் ஏழை நாடுகளுக்கு) அனுப்பியுள்ளது. ஹைட்டியில் கோலராவுக்கு எதிரான போராட்டத்திலும், 2010 களில் மேற்கு ஆபிரிக்காவில் எபோலாவுக்கு எதிராகவும் அதன் மருத்துவர்கள் முன் வரிசையில் இருந்தனர்.

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக செயலாற்ற கியூபாவில் இருந்து 52 மருத்துவர்கள் இத்தாலி நோக்கி புறப்பட்டுள்ளனர். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கு தனது மருத்துவப் படையை கியூபா அனுப்புவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.