இலங்கை ‘கொவிட் -19’ கொரோனா வைரஸில் இருந்து மீண்டெள   128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்குகிறது உலக வங்கி

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மீளும் வகையில் அவசரகால நிலைமைகளை கையாளவும், சுகாதார வேலைத்திட்டங்களை வலுபடுதவும் அதற்காக உதவும் விதத்தில் உலக வங்கியின் ஊடக 128.6 மில்லியன்  அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி தீர்மானம் எடுத்துள்ளது. இது குறித்து உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் ஒப்புதலையும் வழங்கியுள்ளார்.

“கொவிட் -19” கொரோனா வைரஸ் பரவலில் இருந்து உலக நாடுகள் விடுபடும் விதத்தில் சர்வதேச ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை சகல நாடுகளும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் உலக வங்கி மற்றும் சர்வதேச சுகாதார ஸ்தாபனம் ஆகியன அதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் தற்போதுள்ள அசாதாரண நிலைமையில் அதற்கான  துரித நகர்வானது இலங்கையின் மக்களுக்கு  பயனளிக்கக்கூடியதாக அமையும் எனவும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அல்லது கட்டுப்படுத்தவும், தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க, சமூகங்கள் இடையிலான தளர்வை குறைக்க இது சாதகமாக அமையும் வகையில் இந்த கடனுதவியை வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் சர்வதேச வேலைத்திட்டத்தில் உலக வங்கி இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு “கொவிட் -19” வைரஸின்  பரவலைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் தாக்கங்களுக்கான அவசர நிலைமைகளில்  நாடாக தயாராகவும்  செயற்பட்டு வருகின்றது. அதேபோல், இப்போது வரையிலும் கூட கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து விடுபடவும், கட்டுப்படுத்தவும் நாட்டு மக்களை பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் வேகமாக பரவும் இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த எம்மாலான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கியின் மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் ஐதர் பெச்வராய் ரித்தாஹொவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு இலங்கைக்கு வழங்கப்படும் உலக வங்கியின் நிதியில், உலக வங்கி குழுமத்தின் “கொவிட் -19” வைரஸை துரிதமாக கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி “International Bank for Reconstruction and Development’ 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின்  சலுகை  கடன் அடிப்படையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 93.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாக வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுடன் இணைந்து சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சி இந்த வேலைதிட்டனை முன்னெடுக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.