‘தெரன’யில் சதுரவுடன் கதைத்தவர் அலுத்கமகே

‘தெரன’ வாத பிடிய நிகழ்ச்சியொன்றில் அதன் அறிவிப்பாளர் சதுர அல்விஸுடன் முஸ்லிம்களுக்கு அவமானம் ஏற்படும் கருத்துக்களை தெரிவித்தவர் முன்னாள் பா.உ. மஹிந்தானந்த அலுத்கமகே என அலுத்கமகே அவர்களும், JVP யின் அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் உறுதிபடுத்தினர்.

அக் கலந்துரையாடல் விளம்பர இடைவேளையின் போது நடைபெற்றது என்றும், அதனை யாரோ இணைத்தில் பதிவேற்றியுள்ளார் என்றும் அலுதகமகே அவர்கள் ‘அனித்தா’ செய்தி ஊடகத்துக்குத் தெரிவித்தார்.

இத் தொற்று நிலையில் முஸ்லிம்கள் பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்வதாக தாம் நம்புவதாகவும், நிகழ்ச்சியின் முதலாம் சுற்றில் தான் அதை சுட்டிக் காட்டியதாகவும் அலுத்கமகே குறிப்பிட்டார். அதன் பின்னர் இடைவேளையின் போது சதுர அல்விஸ் தன்னை பார்த்து அதனை சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.

‘எனக்கு தொகையொன்று (பணம்) கொடுக்க வேண்டும், இதனைச் சொல்லிக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்ததுக்கு’ (දැන් මට ගාණක් දෙන්න ඕනෑ ඕක කියාගන්න දුන්නට)’என சதுர அல்விஸ் கூறுவது வீடியோவில் இருக்கின்றது. ‘அடிக்கத் வேண்டும் தானே. இப்போது தாக்குவதற்கும் சான்ஸொன்று கிடைத்து விட்டது இந்தப் பகுதியையும் சேர்த்து’ (ගහන්න ඕන නේන්නං. දැන් ගහන්නත් චාන්ස් එකක් ආවා ඔය කෑල්ලත් අල්ලගෙන) என்று சதுர அப்போது கூறுகின்றார்.

‘உலமா சபை தீர்மானம் எடுத்திருப்பதாக என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லுவேன் உலமா அல்ல அனுமான் ஆனாலும் பிரச்சினையில்லை’ என அலுதகமகே கூறுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கின்றது.

இலங்கையின் இஸ்லாமிய மதத் தலைவர்களின் அமைப்பாகிய ஜம்மியதுல் உலமா எனும் அகில இலங்கை இஸ்லாமிய அறிஞர்களின் சபை குறித்து அவ்வாறு பேசியது குறித்தும் அலுத்கமகே அவர்களிடம் வினவினோம்.

தான் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதில்லை என்றாலும், இச் சந்தர்ப்பத்தில் தமது நிலைபாட்டின் அடிப்படையில் அக் கருத்துக்களை தெரிவித்ததாகவும் அலுத்கமகே கூறினார்.

இச் சம்பவம் குறித்து JVP யின் அரசியல் பீட உறுப்பினர் வசந்த சமரசிங்க அவர்களிடம் வினவியபோது, “அச் சந்தர்ப்பத்தில் தான் அந்த இடத்தில் இருந்ததாகவும், சதுரவும் அலுத்கமகேயும் தெரிவித்த கருத்துக்களுக்கு தான் உடன்பாடு இல்லை” எனத் தெரிவித்த அவர், அந் நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் தான் அதனை சுட்டிக் காட்டியதையும் குறிப்பிட்டார்.

“இச் சந்தர்ப்பத்தில், அனைவரும் ஒரே விதமான தொற்றுக்கு முகம் கொடுத்து இருப்பதாகவும், நோயினை இனம் சமயம் என பிரிக்க முடியாது” என்றும் அந் நிகழ்ச்சியில் தான் குறிப்பிட்டதையும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

மூலம்: Anidda.lk சிங்கள செய்தி ஊடகம்
தமிழில்: Hisham Hussain, Puttalam (2020.04.03)

Leave A Reply

Your email address will not be published.