ரஷ்யாவிடமிருந்து அமெரிக்காவுக்கு மருத்துவ உதவி!

கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முகக்கவசம் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தை  அனுப்பியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், ரஷ்ய இராணுவம் முகக்கவசங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவுக்கு சுமந்து செல்கிறது. 124-100 என்ற சிறப்பு சரக்கு விமானம் திங்கட்கிழமை (02ம் திகதி) அமெரிக்காவிற்கு வர திட்டமிடப்பட்டதாக அமெரிக்க செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தொலைபேசி உரையாடல் நடத்தினர். ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம் இருவருக்குமிடையில் போட்டி நிலவுகின்ற போதிலும், புடின் அமெரிக்காவை ஆதரிக்க முன்வருவதாக தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவிட் -19 அல்லது நியூ கொரோனா வைரஸின் விளைவாக 200,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிடுவார்கள் என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றிய பொது அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானவை என்றார்.

இன்று அமெரிக்காவில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 277,522 ஆகும். நாட்டில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 7,403 ஆகும்.

கொரோனா தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ள இத்தாலிக்கு இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டேவின் வேண்டுகோளின் பேரில் சிறப்பு ராணுவ விமானங்கள் மூலம் மருத்துவ உதவிகளையும் ரஷ்யா அனுப்பியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.