செந் தாரகை – தன்னார்வத் திசைகாட்டி

1978, கிழக்கு மாகாணத்தில் வீசிய சூராவளியுடன் உதித்த செந் தாரகை நிவாரணப் படையணி, இன்று நாடு தழுவிய கொரோனா தடுப்புப் பணியில் அயராது ஈடுபடுகின்றது. இப் பதிவு, செந் தாரகை பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பாக விரிகின்றது.

ஆரம்பத்தில், மக்கள் விடுதலை முன்னணி (JVP)யின் வாலிபர் பிரிவான சோஷலிச வாலிப அமைப்பினால், ‘රතු ගැටව්’ (செந் இளைஞர்கள்) என்ற பெயரில், JVP யின் நிவாரணப் படையணியாக தோற்றம்பெறுகின்றது.

2002 ஆம் வருடம் வட மத்தி, கிழக்கு, வட மேற்கு மாகாணங்கள் கடும் வரட்சியில் பாதிக்கப்பட்ட வேளையிலும், 2003 இல் சபரகமுவ, தெற்கு, மேல் மாகாணங்கள் பெரு வெள்ளத்தில் மூழ்கிய நேரத்திலும், இப் படையணியின் மூலம் நிவாராணப் பணிகளை JVP முன்னெடுத்தது.

2004 டிசம்பர் 26 காலை நேரம். சுனாமி பேரலை இலங்கையைக் காவுகொண்டது. அன்று மாலை செந் தாரகைப் படையணி மனிதாபிமானச் சுனாமியாக இயங்க ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவம் வழங்குவது முதல் தற்காலிக இருப்பிடங்களையும், குடியேற்றங்களையும் அமைத்துக் கொடுத்தது.

அன்றைய அரசாங்கம் 41 இலட்சம் ரூபா செலவு மதிப்பீடு செயத காலி (Galle) பஸ் தரிப்பு நிலையத்தை, 5 இலட்சம் ரூபா செலவில், மிகக் குறுகிய நாட்களில் மீள் நிர்மானம் செய்து கொடுத்தது. தென் கரையோர புகையிரதப் பாதையை JVP யும் அதனுடன் இணைந்த தொழில் சங்கங்களும் திருத்தியமைத்தது. கிழக்கு மாகாணத்தின் komari பாலத்தைத் திருத்தியது.

அடுத்தடுத்த வருடங்களில் ஏற்பட்ட (2016 நிலச் சரிவு, 2017 பெரு வெள்ளம்) அனர்த்தப் பிரதேசங்கள் அனைத்திலும் செந் தாரகையின் ஒளிக் கீற்றுகள் மின்னியது.

இன்று, கொரோனா தொற்று நாட்டைப் பீடித்துள்ள நிலையில், செந் தாரகைப் படையணியும் தன் சமூகப் பணிக்குத் தயாராகிவிட்டது. ‘மிகச் சிறந்ததைப் பிரார்த்திப்போம் – மிக மோசமானதுக்குத் தயாராகுவோம்’ என்ற சூளுரையுடன் பணியாற்ற ஆரம்பித்துவிட்டது.

வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர் – தாதிமார் – ஊழியர்களுக்கு போதுமான அளவு சுகாதார பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் இல்லாத நிலையில், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் IDH வைத்தியசாலை உட்பட நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு இவ் உபகரணங்களை விநியோகிக்கின்றது. பொது இடங்களிலும் அரச அலுவலகங்களிலும் கைகளைச் சுத்தம் செய்யும் சுகாதார வசதிகளை அமைக்கின்றது, புகையடித்தலை மேற்கொள்கின்றது.

இப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியை ம.வி.மு.யின் மக்கள் பிரதிநிதிகளின் சம்பள/கொடுப்பனவு நிதியத்தில் இருந்தும், ம.வி.மு. ஆதரவாளர்கள், தனவந்தர்கள்; நன்கொடையாளரிடம் இருந்தும் திரட்டிக்கொள்கின்றது. மேலும், அதன் ஆதரவாளர்களுடன் சமூக ஆர்வலர்களும் சிரமதான அடிப்படையில் பணியாற்றுகின்றாவர்கள்.
** ம.வி.மு.வின் பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் பா.உ.க்கள் வரை தமது சம்பளம்/கொடுப்பனவுகளை சொந்தப் பாவனைக்காக எடுப்பதில்லை. மேற்படி நிதியத்திற்குக் கொடுத்து விடுவார்கள்.

அனர்த்த நிலமையொன்றின் போது உடனடியாக செயல்படும் செந் தாரகை தொண்டர்கள், சுமார் 10,0000 வரை தற்போது இருக்கின்றனர். எனினும் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

“ஒருவர் எல்லோருக்குமாக – எல்லோரும் ஒருவருக்காக” என்ற தொணிக் கூற்றின் அடிப்படையில் இயங்கும் செந் தாரகை நிவாரனப் படையணி,

சமூகப் பணியில் ஆர்வமுள்ள மனிதநேயம் கொண்ட அனைவரையும் தோழமைக் கீற்றுக் கரங்களை நீட்டி வரவேற்கின்றது.

தமிழாக்கம்: Hisham Hussain, Puttalam

Leave A Reply

Your email address will not be published.