ரூபாய் 199.40 ஆக வீழ்ச்சி!
இன்று (06) மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ரூபாய் முன்பை விட வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 199.40 ஆகும். டொலரின் கொள்முதல் விலை ரூ. 193.35 ஆகும்.
அந்நிய செலாவணி வருவாய், சுற்றுலா வருவாய் மற்றும் ஏற்றுமதி குறைந்து வருவதே இதற்குக் காரணம் ஆகும். எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய டொலர்களுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.