அனுர ஹேரத்திற்கு இலங்கையில் தரையிறங்க அனுமதி…

ஆஸ்திரேலியாவிலிருந்து இத்தாலிக்கு எம்.எஸ்.சி. மாக்னிஃபிகா பயணிகள் கப்பலில் இருந்த இலங்கை சமையல்காரர் ஒருவர் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார். ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டு உதவி கோரியுள்ளார். இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனுர ஹேரத் என்ற  சமையல்காரரே இவ்வாறு இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருளைப் பெறுவதற்காக இந்தக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிடப்பட உள்ளது என்று இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இந்த கப்பல் ஜனவரி 5 ஆம் திகதி 2,800 பயணிகளுடன் உலகம் முழுவதும் தனது பயணத்தைத் தொடங்கியது. வைரஸ் பரவுவதால், எந்த நாடும் அதன் துறைமுகங்களில் கப்பலை தரையிறக்க அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக, கப்பல் மீண்டும் இத்தாலிக்கு செல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.